2023 ஜூன் 01, வியாழக்கிழமை

உலகமே சுற்றி தங்கம் கடத்தி வந்த இலங்கையர் இந்தியாவில் கைது

Freelancer   / 2023 மார்ச் 13 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

33 வயதுடைய சந்தேக நபர் 8ஆம் திகதி இரவு பஹ்ரைனில் இருந்து வந்து இறங்கியுள்ளார்..

இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் தனது மலக்குடலில் ஒரு கிலோ தங்கப் பசையை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 காப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்ட தங்கத்தை அந்த நபர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அவர் தமிழகத்தில் பிளம்பர் வேலை செய்து வருவதையும், இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதற்காக அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .