2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

உலகிலேயே வயதான குழந்தைகள் இவர்கள் தான்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 27 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவைச்  சேர்ந்த ‘ரேச்சல் மற்றும் பிலிப் ரிட்ஜ்வே‘ என்ற தம்பதியினர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்  பதப்படுத்தப்பட்ட கருமுட்டைகளிலிருந்து இரட்டை குழந்தைகளைப்  பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தை சேர்ந்த குறித்த தம்பதியினருக்கு 8, 6, 3 மற்றும் 2 வயதுடைய நான்கு குழந்தைகள் உள்ளனர்.

 இந்நிலையில்  கடந்த 1992 ஆம் ஆண்டு  ரேச்சல் நாக்ஸ்வில்லியில் உள்ள தேசிய கரு தான மையத்திற்கு (NEDC) தனது கருக்களை தானமாக வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் 30 வருடங்களுக்குப் பின்னர் குறித்த கருவைப் பயன்படுத்தி  அவர்கள் மீண்டும் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் வெற்றிகரமாக லிடியா , திமோதி ரிட்ஜ்வே என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

இது குறித்து பிலிப் ரிட்ஜ்வே கருத்துத் தெரிவிக்கையில் ” நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இவர்கள் சிறிய குழந்தைகளாக இருந்தாலும், எங்கள் மூத்த குழந்தைகள்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X