2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

பெண் பொம்மைகளுக்கு வந்த சோதனை

Ilango Bharathy   / 2023 ஜனவரி 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்  தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையானக்  கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

 குறிப்பாக பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக”  பெண்கள் ஆண்களின் துணையின்றி வெளியே செல்வதற்கும், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும்  பூங்காவுக்குச் செல்வதற்கும், உயர் கல்வி கற்பதற்கும், விளம்பரங்களில் நடிப்பதற்கும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கும் தலிப்பான் அரசு தடைவிதித்திருந்து.

அது மட்டுமில்லாது ஆடையகங்களில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்களையும் மறைக்குமாறு தலிபான்கள்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  ஆடையங்களில் உள்ள முகம் மறைக்கப்பட்ட பொம்மைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X