Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Nirosh / 2021 நவம்பர் 14 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடக்குமுறையால் வேலைக்குச் செல்ல முடியாத பெண் ஊடகவியலாளர் தனது குடும்பத்துக்காக, வீதியோர வியாபாரியாக மாறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.
எனினும், பெண்கள் எந்த வேலைக்கும் செல்லக்கூடாது, குறிப்பாக ஊடகங்களில் பணியாற்றவும் பெண்களுக்கு தடை விதித்துள்ளனர்.
இதனால், தலிபான்களின் ஆட்சியமைந்த பின்னர் ஆயிரக்கணக்கான பெண் ஊடகவியலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் பர்ஜானா அயூபி என்ற பெண் ஊடகவியலாளர் வேலையிழந்த நிலையில் தனது குடும்பத்தைக் காக்க காபூல் நகர சாலையில் துணி வியாபாரியாக மாறியுள்ளார்.
ஏராளமான ஊடகங்கள் தலிபான்கள் ஆட்சிக்குப்பின் மூடப்பட்டதால், பெண் பத்திரிகையாளர்கள் வேலையிழந்துவிட்டனர். எனக்கு என் குடும்பத்தினரைக் காக்க வேறு வழி தெரியாததால், சாலையோரத்தில் வியாபாரம் செய்யத் தள்ளப்பட்டேன். சர்வதேச சமூகம், ஊடகங்கள் இங்குள்ள நிலையை கவனித்து, பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
48 minute ago