2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

கார்பனை உறிஞ்சும் பலூன்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 08 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியாக, காற்றில் இருக்கும் காபனிரொட்சைட்டை உறிஞ்சும் பலூனை இஸ்ரேலைச் சேர்ந்த ' ஹை ஹோப் லேப்“ (high hopes labs) என்ற தனியார் நிறுவனம்  உருவாக்கி உள்ளது.

குறித்த பலூனானது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி காற்றில் கலக்கும் காபனிரொட்சைட்டை மீண்டும் திட நிலைக்கு கொண்டு வந்து மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது  தரையில் இருந்து 50 கிலோ மீற்றர் வானத்தில் காற்றிலிருக்கும் காபனிரொட்சைட்டை 80 பாகை செல்சியஸ் தட்பவெட்பத்தில் திரவ நிலையில் இருந்து திடமான நிலைக்கு மாற்றி அதை உறிஞ்சி பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X