2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

தங்க வாய்?

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக  அதிகரித்து வருகின்றன.

அந்தவகையில் அண்மையில் டுபாயில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றி வருவதை அவதானித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும்  அவர்களது பயணப் பெட்டிகளையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். எனினும் அவர்களிடம் இருந்து எவ்வித சட்டவிரோத பொருளும் சிக்கவில்லை. இருந்த போதிலும் தங்கள் முயற்சியைக் கைவிடாத அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனித்தனியாக சோதனை செய்து பார்த்தனர்.

இதன் போது  அவர்கள் இருவரும் தங்கள் வாய்க்குள் 951 கிராம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.”

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகவே பலரும் ”இது வாயா இல்லை தங்கச் சுரங்கமா?” என நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .