2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

பஸ் தீப்பற்றி எரிந்ததில் 45 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 24 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கேரியாவில், பயணிகள் பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்ததில்  45 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நேன்றைய தினம்(23)   அதிகாலை 2 மணியளவில் துருக்கியில் இருந்து வடக்கு மசிடோனியா (Macedonia) நோக்கி பல்கேரியா வழியாக பயணித்த பஸ் ஒன்றே  இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணித்த இப்பஸ்ஸில் தீயில் கருகி 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இவ்விபத்தானது எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விசாரணைகள்  இடம்பெற்று வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X