Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 14 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) பல மத்திய மாநாடுகளில் "சீனாவின் இழந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க பகுதிகளை மீட்டெடுப்பதற்கான" பெய்ஜிங்கின் அழைப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
அக்டோபர் 2021 அறிக்கை ஒன்றில், மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) "நூற்றாண்டு நிறைவையொட்டி நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பங்களிக்கும்" முன்னேற்றங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தியில் ஒரு புதிய பரிமாணம் குறித்தும் குறிப்பிட்ட சீனத் தலைவர் ஷி ஜின்பிங், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி அபிவிருத்தியில் சீனா செய்த சாதனைகளையும் கோடிட்டுக் காட்டினார்.
வலுவான குழுநிலை செயற்பாடுகளை விருத்தி செய்தல், நவீன ஆயுதங்களை உருவாக்குவது, நவீனமயப்படுத்தப்பட்ட முகாமைத்துவ அமைப்பை உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் நவீனமயமாக்கலை விரைவுபடுத்துதல் போன்றவை சீனாவின் உலகளாவிய இராணுவ மூலோபாயத்திற்கான முக்கிய நோக்கங்களாகும். குறிப்பாக கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களுக்கு இவை மிகவும் பொருந்தும் என்பது தான் சீனாவின் வியூகம்.
பெய்ஜிங்கின் இந்த மூலோபாய யதார்த்தங்கள்தான் அதன் முக்கிய ஆசிய அண்டை நாடுகளுடனான சீனாவின் சிக்கலான உறவுகள் உட்பட எந்தவொரு சவாலையும் எதிகொள்ளும் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஜப்பானுடனான சீனாவின் உறவு இதற்கு சான்றாகும்.
பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீட்டை மேற்கொள்ளும் சீனா (உதாரணமாக தைவானுடனான அதன் கடும்போக்கு) ஆசியாவில் உள்ள பிற நாடுகளில் அதன் செல்வாக்கை பயன்படுத்தி சாதிக்க முழுமூச்சுடன் ஈடுபடும் என்பதை சீனாவின் நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago