2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

அல் - குவைதா தலைவர் உயிருடன் உள்ளாரா?

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராணுவத்தால் அல் – குவைதா (Al-Qaeda) பயங்கரவாத அமைப்பின்  தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர“, அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri ) என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பயங்கரவாத குழுக்களின் இணையதளங்களை கண்காணிக்கும் எஸ்.ஐ.டி.இ., என்ற புலனாய்வு அமைப்பு ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

குறித்த வீடியோவில் அய்மான் அல் ஸவாஹிரி பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் வீடியோவில் ”ஜெருசலேம் யூதமயமாகும் என்பது நடக்காது என அவர் கூறியுள்ளதாகவும், ரஷ்ய படைகள் மீது அல்-குவைதா நடத்திய தாக்குதலை பாராட்டியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனினும் இவ்வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .