2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

போப் ஆண்டவர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி

Ilango Bharathy   / 2023 மார்ச் 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப்  ஆண்டவர் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் எனத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ”அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார்” எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

86 வயதான போப்  பிரான்சிஸ் அண்மைக்காலமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X