Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய முப்படைத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்ற ஹெலிகொப்டர், இன்று(08) பிற்பகல் விபத்துக்குள்ளாது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகொப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்ததில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஹெலிகொப்டரில் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர் என்றும் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025