2021 ஜூலை 31, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் விமானத் தாக்குதல்களில் மருத்துவ அதிகாரிகள் பலி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 03 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரத்தில் நேற்றிரவு மருத்துவமனையொன்றின் மீது  இடம்பெற்ற குண்டுவீச்சில் எல்லைகளில்லாத வைத்தியர்கள் அமைப்பின் மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

மருத்துவ தொண்டு நிறுவனத்தால் நடாத்தப்படும் வைத்தியசாலையை அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள் தாக்கியிருக்கலாம் என வெள்ளிக்கிழமை நேட்டோ தெரிவித்துள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

தலிபான்களால் குண்டூஸ் மாகாணத்தின் தலைநகரம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் மருத்துவ உதவிகளை வழங்கி வரும் பிரதான நிறுவனமான எல்லைகளில்லாத வைத்தியர்கள் அமைப்பு தனது எல்லைக்கு அப்பற்பட்ட சேவைகளை கடந்த நாட்களில் வழங்கியிருந்தது.

குண்டூசில் உள்ள தமது மருத்துவமனை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 க்கு தீவிரமான குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி, பயங்கர சேதமடைந்துள்ளதாக எல்லைகளில்லாத வைத்தியர்கள் அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்த நேரம் 105 நோயாளர்களும், அவர்களின் உடனிருப்போரும், எண்பதுக்கு மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் பணியாளர்கள் வைத்தியசாலையில் இருந்ததாக அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .