2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

ரமாடிக்கு அருகிலுள்ள பகுதிகளை இழந்தது ஐ.எஸ்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் கடந்த மே மாதம் கைப்பற்றப்பட்ட அன்பார் மாகாணத்தின் தலைநகரான ரமாடியை கைப்பற்றும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ள ஈராக் படைகள், ரமாடிக்கு வடக்கு மற்றும் மேற்கிலுள்ள சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளன.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதல்களின் ஆதரவுடன், 2,000 வரையான துருப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து மேற்படி பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சன்குரா, அல்பு ஜெலிப், அல்-அதானியா மற்றும் கிலோமீற்றர் 5 எனப்படும் அல்பு ரிஷாவின் பகுதிகளே கைப்பற்றப்பட்டதாக அன்பார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரிகேடியர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இம்மாத ஆரம்பம் முதல் மொத்தமாக 27 தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை, சிரியா மற்றும் ஈராக்கில் நடத்தும் நாளாந்த தரவுகளின்படி உள்ளது. 

முன்னேற்றத்தில், அமெரிக்க கூட்டணியின் விமானத் தாக்குதல்கள் பாரிய பங்கு வகிப்பதாகவும், இதே வேகத்தில் படை நடவடிக்கை தொடருமாயின், இந்தமாத இறுதிக்குள் ரமாடி விடுதலை பெற்று விடும் என மாகாணசபை உறுப்பினர் அதால் பதாவி தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .