2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் தற்கொலைத்தாக்குதலில் 9 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 07 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் தலிபான்களினால் “பழிவாங்கல் தாக்குதல்” என வர்ணிக்கப்பட்ட, வடமேற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதாளில் ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹைபர்-பக்டுன்ஹாவா மாகாணத்தின் சார்சாட்டா மாவட்ட நீதிமன்றதுக்கு வெளியேயுள்ள ஷப்க்டார் சந்தைப் பகுதியிலேயே தற்கொலைதாரி தன்னை வெடிக்க வைத்ததாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, மேற்படி வெடிப்பில் 18 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பானது, பிராந்தியத்தின் பிரதான நகரமான பெஷாவாரிலிருந்து 30 கிலோமீற்றர் தூரத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்துக்குள் நுழைய தாக்குதலாளி முயற்சித்ததாக ஷப்க்டார் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அலி ஜன் கான் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினர் இருவரால் தற்கொலைதாரி தடுக்கப்பட்டதாகவும் அதனையடுத்தே அவர் நீதிமன்றத்துக்கு வெளியே தன்னை வெடிக்க வைத்ததாகவும் தெரிவித்தார்.

மேற்படி தற்கொலைத்தாக்குதலுக்கு, டெஹ்ரீக்-இ-தலிபான்களிடமிருந்து பிரிந்த குழுவொன்று உரிமை கோரியுள்ளதுடன், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநரை, 2011ஆம் ஆண்டு சுட்டுக் கொன்ற பாகிஸ்தானின் முன்னாள் கொமாண்டோவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கான பழிவாங்கல் தாக்குதல் என தெரிவித்துள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .