2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

ஜப்பானிய பூகம்பம்: உயிரிழந்தோர், காணாமல் போனோர் 26,201

Super User   / 2011 மார்ச் 24 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 11 ஆம்திகதி ஏற்பட்ட பூகம்பத்தினால் ஜப்பானில் இறந்தவர்கள்மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை 26,201 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 9700 பேர் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16501 பேர் காணாமல் போனதாக உத்தியோகபூர்வமாக  பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் 2766 பேர் காயமடைந்துள்ளனர்.

1923 ஆம் ஆண்டின் பின்னர் ஜப்பானில் அதிக எண்ணிக்கையானோரை பலிகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். 1923 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட பூகம்பமொன்றினால் 142,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பதினால் லட்சக்கணக்கான மக்கள் தமது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .