2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

10 கோடி மக்களை வறுமைக்குத் தள்ளிய கொரோனா

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்றுப் பரவலால் உலகில் 10 கோடி மக்கள் வறுமை நிலைக்குத்  தள்ளப்பட்டு  விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் (António Guterres ) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”உலகளாவிய ஒற்றுமை என்பது நாடுகளிடையே செயலில் காணப்படவில்லை. இதனால் மோதல் உள்ள நாடுகள் மற்றும் பலவீனமான நாடுகளில் வசிக்கும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.

அத்துடன் வளர்ந்த நாடுகள் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் பின்தங்கிய நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X