Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 15 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் இருவர் 14 கங்காருக்களை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள லாங் பீச்சில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் ஐந்து பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகவும் ,6 மாதங்களே ஆன கங்காரு குட்டியொன்று காயமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல் ஏழு பெரிய கங்காருக்களும், ஒரு கங்காரு குட்டியும் Maloneys Beach பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த சிறுவர்கள் இருவரும் அக் கங்காருக்களை அடித்தே கொன்றுள்ளதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .