Super User / 2011 மார்ச் 26 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனேடிய நாடாளுமன்றம் ஆளுநர் நாயகம் டவிட் ஜோன்ஸ்டனினால் இன்று சனிக்கிழமை கலைக்கப்பட்டுள்ளது. ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் பின்னர் இந்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதனால் மே 2 ஆம் திகதி அங்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 7 வருடகாலத்தில் நடைபெறவுள்ள 4 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
பிரித்தானிய அரசியார் இரண்டாம் எலிஸபெத் கனேடிய பிரதிநிதியான ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸடனின் வாசஸ்தலத்திலிருந்து வெளியேறிய பிரதமர் ஹார்பர், நாடாளுமன்றத்தை கலைக்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026