2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

2024 ஆம் ஆண்டு முதல் அனைத்திற்கும் ஒரே சார்ஜர்

Ilango Bharathy   / 2022 ஜூன் 09 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2024 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான  கைத்தொலைபேசி சார்ஜர்களைப்  பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
 
அப்பிள் கைத்தொலைபேசிகள் மற்றும் அண்ட்ரொய்ட் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு சார்ஜர்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதால்  ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் அனைத்து கைத்தொலைபேசிகள், டப்ளட்கள், கெமராக்கள் ஆகியவற்றில் அண்டிரொய்ட் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சி-டைப் சார்ஜர்களைப்  பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் அப்பிள் நிறுவனம் ஐ-போன்களின் சார்ஜர் மற்றும் கனெக்டர் பின்னை மாற்றி வடிவமைக்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .