2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

33 வருடங்களாக பாம்பின் விஷத்தை உடலுக்குள் செலுத்திவரும் நபர்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 33 வருடங்களாக நபர் ஒருவர் பாம்புகளின் விஷத்தை தன் உடலுக்குள் செலுத்தி வரும் விநோத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்றது.

லண்டனைச் சேர்ந்த 55 வயதுடைய ஸ்டீவ் லுட்வின் ( Steve Ludwin ) என்பவரே இவ்வாறு பாம்புகளின் விஷத்தை ஊசியால் தன் மூட்டுகளில் செலுத்தி வருகின்றார்.

ஏழை நாடுகளில் உள்ள மக்கள் பாம்பு தீண்டுதலினால் அதிகளில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்காக மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தான் இவ்வாறு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பாடசாலைப்  படிப்பை முடித்துவிட்டு, லண்டனில் மிருகக்காட்சி சாலைகளுக்கு விலங்குகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த போதே தனக்கு பாம்புகளின்  விஷங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 33 வருடங்களாக, பத்து நாட்களுக்கு ஒரு தடவை இவ்வாறு பாம்பின் விஷத்தை தன் உடலுக்குள் ஊசியால் செலுத்தி வருவதாகவும் மேலும், தன் பொழுதுபோக்கிற்காக நாகபாம்புகளையும், ராட்டில்ஸ்னேக்ஸ் உட்பட சுமார் 33 விஷப்பாம்புகளையும் தன் வீட்டின் அறை ஒன்றில், வளர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .