2022 ஜூலை 06, புதன்கிழமை

Zoom செயலில் இருக்க உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியர்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

Zoom –யில் ஆசிரியர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஜமேக்காவில் இடம்பெற்றுள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக வீட்டில் இருந்தே தொழில் புரியவும் , கல்வியைத் தொடரவும் முன்னணி நிறுவனங்கள் மற்றும்  கல்வி நிறுவனங்கள் சூம் (Zoom) செயலியைப்  பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜமேக்காவில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் மாநாடு ஒன்றில்  ஆசிரியர்  ஒருவர் தனது வெப்கெமரா இயங்கிக் கொண்டிருப்பது தெரியாது, தனது துணைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமை அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

இதனையடுத்து குறித்த கூட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களில் குறித்த  வீடியோவானது இணையத்தில் வெளியானது.

 

இச் சம்பவத்தினையடுத்து  குறித்த ஆசிரியருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழவே இது தொடர்பில் மன்னிப்பு தெரிவித்த ஆசிரியர் ” கெமெரா ஒன் செய்யப்பட்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. தவறுதலாக இவ்வாறு நடந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .