2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (02.11.2014 – 08.11.2014)

A.P.Mathan   / 2014 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (02.11.2014 – 08.11.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தைரியத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்ற மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நீங்கள் பிறரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வயது மூத்தோர்களின்  அசீர்வாதம் கிடைக்கும். இசையில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும். தனலாபம் ஏற்படும். மேலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நினைத்த காரியம் இனிதே நடைபெறும். வார இறுதியில் மனதளவில் சில குழப்;பங்கள்  காணப்படுவதால் இந்த காலகட்டங்களில் புதிய வேலைக்கான திட்டங்களை தவிர்ப்பது நன்மையை தரும். பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தங்களுடைய நகைச்சுவை பேச்சாலும் புத்திசாலித்தனத்தாலும் மற்றவர்களை தங்கள் வசப்படுத்தும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில்  உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.  புதிய முயற்ச்சிகள் வெற்றி அடையும்நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் ஏற்படும். நல்லவர்களின்  சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்து காத்து இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சில நேரங்களில் அலைச்சல்கள் காணப்படும்.  பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. வியாபாரம் விருத்தியடையும் அரசினரால் ஆதாயம் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் உல்லாச பயணங்கள் சென்று வரலாம். குழந்தைகளுக்கு புதிய பொருட்கள் பரிசாக கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். 
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பிறர் மனம் நோகாமல் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பெண்களுடன்  விவாதங்கள் ஏற்பட்டு வீணா பிரச்சினைகள் உண்டாகும்.  எனவே பெண்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சகோதரர் சகோதரிகளின் வருகை உண்டாகும். பொது இடங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். இதனால் மகிழ்ச்சி உண்டாகும்;; . வெளியூரிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகிழ்ச்சியான செய்திகள் வரும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். வெளியிடங்களுக்கு சென்று வரும் பொழுது தங்களது பொருட்களின் மேல் கவனமாக இருத்தல் அவசியமாகும். உணவு விஷயத்தில் அதிருப்பதியான சூழ்நிலை காணப்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.
                                                                     
அதிர்ஷ்ட திகதி : 09
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
கருணை உள்ளமும் கண்டிப்பும் மிகுந்த கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரம் சம்மந்தமாக நீண்டதூர பிரயாணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். வியாபாரம் விருத்தியடைந்து பணவரவு அதிகரிக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில்  இதனால் வீணா பிரச்சனைகள் உண்டாகும். மேலும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் சில புதிய வியாபாரங்கள் தங்களைத் தேடி வரும். தங்களுடைய புத்திசாலிதனத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். வேலையாட்களின் மூலம் மறைமுக எதிர்ப்புக்கள் உண்டாகும். எனவே பணியாட்களிடையயே சரியான உறவுகளை மேற்கொள்வது நன்மை தரும். 
 
அதிர்ஷ்ட திகதி : 6 
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
துணிச்சலுக்கும் விடாமுயற்சிக்கும் பெயர் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வியாபாரத்தில் அதிக பணலாபம் உண்டாகும். சில நேரங்களில் அலைச்சல் தோன்றி மறையும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். குடும்பத் தலைவியிடம் மகிழ்ச்சியுடன் நடந்து கொள்வீர்கள். சில நேரம் தீய நட்பினால் நஷ்டங்கள் உண்டாகும். இதனால் குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படும். எனவே கவனத்துடன் நடந்து கொள்வது அவசியமாகும். உங்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் மனைவிக்கு தெரியும் படி இருப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் கவனத்துடன் இருந்தால் மகிழ்ச்சி காணலாம். 
 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கண்ணியமும் கலை ரசனையும் மிகுந்த கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளுடன் பிரச்சினை ஏற்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வீட்டில் களவு போகும் சூழ்நிலை உருவாகும்  இதனால்  மனதில் தேவையில்லாத பயங்கள் தோன்றும்.  வீண்  அலைச்சல்களினால்;  மனம் சஞ்சலமடையும்.  இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிராத்தனைகளில் ஈடுபடுவது நன்மை தரும். சகோதரர் வகையில் லாபம் உண்டாகும். வீடு மனை ஆகியவைகளில் இவ்வளவு காலம் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திரு விழக்கு வழிபாடுகளுக்கு அழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
நியாயம் ஒன்றே உயிர் மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
 
இந்தவாரம் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையெனில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் .மனதில் குழப்பங்கள் தோன்றும். அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். இதனை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். சில நேரங்களில்  மற்றவர்களினால் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும். எனவே அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது.  வேண்டாத செலவுகளால்  வேதனையடைய நேரிடும்;. இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சில வாய்ப்புக்கள் வீடு தேடி வரும். அதனை சாதுர்யமாக பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.  
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ் 
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தனது திறமையால் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே..! 
 
இந்தவாரம் மகான்களின் தரிசனம் கிடைக்கும் .நமது வாழ்க்கையில் முன்மாதிரியாக விளங்கும் பெரியவர்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல் வியாபாரத்தில் அனுபவசாலிகளின் அனுபவங்களை கேட்டு பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மற்றும் வார்த்தைகளில் நிதானம் தேவை. மேலும் பணத்திற்கு பிரச்சனைகள் உண்டாகும் இதனால் அலைச்சல்கள் உண்டாகும். பிறர் உதவியை எதிர்நோக்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆனாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
சோதனைகளையும் சாதனைகளாக்கும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம் . பிறரின் பேச்சை கேட்டு தேவையற்ற பிரச்சனைகளில் முன்னநிற்;பதை தவிர்க்கவும்.வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதுடன் பல வாய்ப்புக்கள் பின்தள்ளபடும். இதனால் மனதளவில்  சோம்பல் உண்டாகும். சாதுக்களின் நேரிடையான தரிசனங்கள் கிடைக்கும் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றுவருவீர்கள். இதனால் மனம் அமைதியடையும். கடவுள் நம்பிக்கையின் மூலம் சில வெற்றிகள் தங்களைத் தேடி வரும். பெண்கள் வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்துடன் செல்வது அவசியமாகும். 
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடையும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு வெளியூரிலிருந்து வரும்  செய்திகள் பணப் பிரச்சினைகளை உருவாக்கும்.  உடன் பிறந்த பெண்களினால் வரவுகள் உண்டாகும். செயல்களில் தவறுகள் நிகழும் அனாவசியமான செலவுகள் காணப்படும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். வியபாரத்தில் சில ஏமாற்றங்கள் காணப்படும். எனவே பங்குதாரர்களுடன் எமுத்து வழி ஒப்பந்தம் செய்வது நல்லது. சில இ;டங்களில் வீண் விரயங்கள் காணப்படும். அரசாங்க அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதனால் அதிகாரிகளுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவீர்கள். எனவே இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பொறுமையின் சிகரமாகத் திகழும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு  உடல் நிலையில் சோர்வு காணப்படும் மனதில் குழப்பமான சூழல்கள் உருவாகும்.  குடும்பத்தில் உள்ள பெண்களுடன் விவாதங்கள் உண்டாகும். எனவே நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். புதிய முயற்சியில் தோல்விகளே  காணப்படும். ஆனாலும் தளர்ந்து விடாமல் முயற்ச்சி செய்து கொண்டே இருப்பீர்கள்.  பயணத்தில்  திருட்டு போகும் சூழ்நிலை உருவாகலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். அரசாங்க வேலைகள் இழுபறியின்றி முடியும். இதனால் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். சில இடங்களில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். இதன் மூலம் செலுத்த வேண்டிய நிலுவைகளை செலுத்தி மன அமைதியைப் பெறுவீர்கள். வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ் 
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
சொல்லிலும் செயலிலும் தனிமுத்திரை பதிக்கும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம் . இதனால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் . வியாபாரத்தில் பல அரிய நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள் இதனால் பணவரவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். காணமால் போன பொருள் மீண்டும் கிடைக்கும். இதன் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  சில முயற்சியில் உங்களது கவனக் குறைவினால் தோல்வியான நிலை உண்டாகும்.  இதனால் மனதளவில் சிறிதளவு குழப்;பங்கள்  காணப்படுவதால் இந்த காலகட்டங்களில் புதிய வேலைக்கான திட்டங்களை தவிர்ப்பது நன்மையை தரும். வார இறுதி உங்களுக்கு சிறிது குழப்பமாகவே காணப்படும். 
 
அதிர்ஷ்ட திகதி : 6 
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .