2022 ஜனவரி 22, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (05.01.2014 – 11.01.2014)

A.P.Mathan   / 2014 ஜனவரி 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (05.01.2014 – 11.01.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
செய்யும் வேலைகளை திறமையாகச் செய்யும் மேட ராசி அன்பா்களே..!
 
இந்தவாரம் நண்பர்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குழந்தைகளுடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மாற்றுத் தொழிலில் லாபம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். பாராட்டுக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். ஆனால் வார இறுதியில் மற்றவர்கள் உதவியை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். தலைவலி, மனபயம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காணப்படும். முக்கிய பணிக்காக தங்கள் சேமிப்புகள் குறையும். 
 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தரும சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்ட இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வெளியில் செல்லும்போது கவனத்துடன் இருப்பது அவசியம். மற்றவர்களிடம் வீண் பேச்சுக்கு ஆளாகாமல் தங்கள் கடமையை செய்வது நன்மையைக் கொடுக்கும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. தொழிலில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரிக்கும். சொத்து பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். வியாபாரம் சுமாராகவே செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். இருந்தபோதிலும் வார இறுதியில் பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை. காரியங்கள் நடைபெற தாமதம். பணியில் இருப்பவர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நீங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். துக்கமான சூழல் உருவாகும். பண தேவைகள் அதிகமாக காணப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. வார இறுதியில் மன பயம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகளுக்கு உண்டான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்கு சாதகமாக அமையும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
உற்சாகத்துடன் செயல்களில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் ஏற்றுமதி - இறக்குமதி செய்வோர் பெருத்த லாபம் பெற்று மனம் மகிழ்ச்சியடையலாம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. சிலர் புதிய வாகனத்தை வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. இடமாற்ற முயற்சிகள் வெற்றியைத்தரும். எதிர்பாராத திடீர் செலவுகள் காணப்படும். பெரியவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப விடயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. வேலை நெருக்கடியால் உடல் நலம் பாதிக்கப்படும். பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை. 
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
சந்திராஷ்டமம்: 
ஜனவரி 04ஆம் திகதி மாலை 12.36 மணியிலிருந்து ஜனவரி 06ஆம் திகதி மாலை 02.41 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
பெரியோர்களிடம் பணிவாக நடந்துகொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். புது வாகன யோகம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் லாபகரமாக அமையும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. பணம் தேவைக்கேற்ப வரும். மற்றவர்கள் மன வேதனை தந்தாலும் அவர்களிடம் சுமூகமாக பழகி சுமூகத்தீர்வு காண்பது பிரச்சினையைக் குறைக்கும். வாடிக்கையாளர்களிடம் முன் கோபம் கொள்ளாமல் இருப்பது நலம். மேலதிகாரிகளுடனும் எதிரிகளுடனும் மிக கவனமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். 
 
அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்: 
ஜனவரி 6ஆம் திகதி மாலை 02.41 மணியிலிருந்து ஜனவரி 08ஆம் திகதி மாலை 08.32 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9.
 
கம்பீரமான தோற்றத்திற்கு சொந்தக்காரரான கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உடல்நிலை மேம்பாட்டிற்கான பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். கடின உழைப்பால் லாபம் கிடைக்கும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவுவர். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், மனதில் உற்சாகம் பிறக்கும். பணம் தேவைக்கேற்ப வரும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பணி நியமன ஆணைகள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
சந்திராஷ்டமம்: 
ஜனவரி 8ஆம் திகதி காலை 05.59 மணியிலிருந்து ஜனவரி 10ஆம் திகதி மாலை 05.59 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
உயர்ந்த எண்ணங்களைக் கொண்ட துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு கூடும். கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்லும் நிலை   நல்லவர்களின் சேர்க்கை சுகமான உணவு மனதளவில் அலைச்சல் ஆகியவை காணப்படும். ஆனால் மற்றவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். பயணங்கள் பயனுடையதாக இருக்கும்.
இல்லத்தில் உள்ள பெண்கள் பெரியவர்களுடன் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
சந்திராஷ்டமம்: 
ஜனவரி 10ஆம் திகதி காலை 05.59 மணியிலிருந்து ஜனவரி 13ஆம் திகதி மாலை 05.42 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு காட்டும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நீங்கள் விரும்பிய பொருட்கள் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். பிரயாணம் செல்லும் நிலை ஏற்படலாம். இதனால் லாபம் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளுடனும் பகையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லத்து சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதிகளில் ஓர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்தவாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
உயர்ந்த சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மன பயம் நீங்கி மனோ பலம் அதிகரிக்கும். வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பெண்களுக்கு தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும். பணவரவுகள் அதிகரிக்கும். கணினி துறையை சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் கிட்டும். இடமாற்ற முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரிகளுக்கு ஓர்டர்கள் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சுப செய்திகள் வந்து சேரும். வார இறுதியில் பிறருடைய உதவி நாடும் நிலை உருவாகலாம். வீண் மனஸ்தாபம் தோன்றும். உடல் நிலையில் கவனம் தேவை.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தர்மம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் இல்லத்தில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்கள் பெருத்த லாபம் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளுடனும் எதிரிகளுடனும் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்க ஏதுவான நாள். விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்க்கலாம். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கலைகளில் அதிக ஈடுபாடு காட்டும் கும்ப ராசி அன்பர்களே..!
 
குடும்ப நண்பர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்து கொண்டு மங்கலப் பொருள்கள் பெற்று மகிழ்வீர்கள்.  உற்சாகமாக செயல்பட்டு உயர்வான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். தாய் வழி உறவினரால் பண உதவி கிடைக்கும். இ;டமாற்ற முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். பங்குச் சந்தைகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் சுமாரான உறவுகள் காணப்படும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட திகதி : 06 
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
எல்லோரிடமும் நேர்மையுடன் பழகும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் நம்பி ஏமாற வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவுகள் காணப்படும். சொத்தில் சங்கடங்கள் உண்டாகும். இடமாற்றம் முயற்சிகள் வெற்றியைத் தரும். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணம் தேவைக்கேற்ப வரும். வியாபாரத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். கணவன் - மனைவி உறவு சுமூகமாக செல்லும். பெண்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வார இறுதியில் ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.
 
அதிர்ஷ்ட திகதி : 11
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X