2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (06.04.2014 - 12.04.2014)

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (06.04.2014 - 12.04.2014)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அசாத்தியமான துணிச்சலை கொண்ட மேட ராசி அன்பா்களே..!

இந்தவாரம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி பெறும். வங்கி சேமிப்பு உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பொது வாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் அவசியம். அலைச்சல்கள் குறையும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே முடியும். புதிய முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பட்ஜெட் போட்டு செலவு செய்யும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பணவரவில் தாமதம் இருக்கும். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். முன்னேற்றம் காண கடவுள் வழிபாடு அவசியம். ஆனாலும் வார இறுதியில் சுபவிரயம் உண்டு. குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. விருப்பங்கள் நிறைவேறும். கடிதங்கள் சுபசெய்தியை கொண்டு வந்து சேர்க்கும். உறவினர்கள் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நட்பை பெரிதாக மதிக்கும் மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் கருணை நிறைந்த உங்களின் செயல்களை சிலர் குறை கூறுவர். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பது நன்மை தரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். வீண் விவகாரங்களில் இருந்து விடுபடுவீர்கள். வரவிற்கு ஏற்ற செலவுகள் காணப்படும். பகையாளிகள் உங்கள் நண்பர்களாகலாம். ஆனால், வார இறுதியில் மன அமைதிக்கு இடையூறு ஏற்படும் நிகழ்வுகள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் திருப்தி தராது. வண்டி, வாகனம் பயணம் ஆகியவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம் : நவகிரகம்கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தியாக உணர்வும் உதவும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புதிய முயற்சிகளை யோசித்து செயல்படுத்துவது நல்லது. உங்களின் கடந்த கால உழைப்பிற்கு நற்பலன் தேடி வரும். தொழில் வளர்ச்சி பணிகளில் பரிமாணம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை முடிக்க உடனிருப்பவர்கள் ஆதரவு கிடைக்கும். நிழல் போல் தொடர்ந்த கடன் சுமை குறையும். எதிரிகள் காணாமல் போவார்கள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் பெருமை வந்து சேரும். கை விட்டுப்போன பொருள் மீண்டும் கிடைக்கும். வழிபாடுகளின் மூலம் வளர்ச்சி காணும் நாள். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தலைமை குணமும் அடுத்தவர்களுக்கு உதவும் குணமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் சான்றோர்களின் அறிமுகம் கிடைத்து சில நன்மை பெறுவீர்கள். தொழில் சார்ந்த இடையூறு விலகும். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு உண்டாகும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமண வாய்ப்புகள் கை கூடி வரும். வருங்கால நலன் கருதி சேமிப்புக்களை உயர்த்துவீர்கள். மனதில் போட்ட திட்டம் எளிதாக நிறைவேறிவிடும். ஒற்றுமைக்கு குறைவு வராது. வரவிற்கு ஏற்ற செலவுகள் உண்டு. இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 11
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுதுணி
அதிஷ்ட தெய்வம்: குருபகவான்கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடுமையான உழைப்பும் சிக்கனத்தை உயிர் மூச்சாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் அவசரமாக சில பணிகள் உருவாகலாம். தொழிலில் உள்ள அனுகூல சூழ்நிலையை பாதுகாப்பது நல்லது. பண வரவை விட குடும்ப செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை  எடுக்கவும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிக்க  மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். வார இறுதியில் பெண் வழி பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நிலையை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தாய்வழி ஆதரவு பெருகும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். எனவே இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதிதுலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

மற்றவர்களுக்கு சென்று உதவக்கூடிய துலா ராசி அன்பர்களே..!
    
வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். விடா முயற்ச்சிக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பெண்களால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வர். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறலாம். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். இந்தவாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதிவிருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

அதீத உள்ளுணர்வு சக்திகளை தன்னகத்தே கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் வருமானம் திருப்தி தரும். உதவிகள் கேட்ட இடத்தில் இருந்து கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். புத்திசாலித்தனமான செயல்களால் புகழ் அதிகரிக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சீரான அளவில் வளர்ச்சி பெறும். பொதுவாகவே மகிழ்ச்சியான வாரம் இது.

அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்

சந்திராஷ்டமம்:
ஏப்ரல் 05ஆம் திகதி மாலை 03.13 மணியிலிருந்து ஏப்ரல் 07ஆம் திகதி காலை 03.05 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கொள்கையை காப்பாற்ற போராடும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படும். நண்பர்களின் கவனக்குறைவான செயலை குறை சொல்லி பேசவேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். எனவே தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகம் தேவை. விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டு சிறப்புக்களைப் பெறும் நாள். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பம்பரமாக சுழன்று பணி புரிந்து பலரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்

சந்திராஷ்டமம்:
ஏப்ரல் 07ஆம் திகதி காலை 03.05 மணியிலிருந்து ஏப்ரல் 10ஆம் திகதி மாலை 03.32 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உழைக்கும் பாட்டாளி மக்களின் உரிமைக்காக போராடும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உற்சாக மனதுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். நினைத்த காரியத்தை எப்படியாவது செய்து முடிப்பீர்கள். ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் ஏற்படலாம். பாதியிலேயே விட்ட காரியங்களை செய்ய நேரிடும். இட மாற்றங்களால் இனிய மாற்றம் உண்டாகும். வருமானம் பெருக கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உற்சாகமும் சோர்வும் வந்து வந்து நீங்கும். 

அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்

சந்திராஷ்டமம்:
ஏப்ரல் 10ஆம் திகதி காலை 03.32 மணியிலிருந்து ஏப்ரல் 12ஆம் திகதி காலை 02.27 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

லாபம் சம்பாதிப்பதில் தீர்க்கமான அறிவு உடைய கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் முக்கிய பணிகள் நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். விற்பனைகளை அதிகரிக்க மாற்று உபாதைகளை பின்பற்றுவது அவசியமாகும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும். எடுத்த சில பணிகளை பாதியிலேயே விட்டு விடுவீர்கள். வார இறுதியில் கணிவான பேச்சுக்களால் காரியத்தை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் ரீதியான பயணமொன்று ஏற்படலாம். காணாமல்போன பொருள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். நண்பர்களிடம்  நயமாகப் பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தன்னம்பிக்கையோடு செயல்படும் வாரம் இது.

அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

வார்த்தை ஜாலத்தினால் காரிய ஜெயம் அடைய கூடிய மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நன்மை உண்டாகும். அதிகம் பயன்படாத பொருட்களை வாங்காதீர்கள். எதிர்கால திட்டம் தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பொது காரியங்களில் நாட்டம் செல்லும். தன்னம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். வெளியுலகத் தொடர்புகள் விரும்பும் விதத்தில் அமையும். நட்பு வட்டம் விரிவடையும் நாள். உற்றார், உறவினர்களை கண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரலாம். இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .