2022 ஜூலை 06, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (12.10.2014 - 18.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (12.10.2014 - 18.10.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை கழிக்காமல் உழைப்பால் உயரும் மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உத்தியோகத்தில் சில சவால்களை சந்திக்க வேண்டிவரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய உறவினர்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் நல்லதாகவே முடியும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ள விவாதங்கள் வந்து போகும்.  பங்குகள் மூலமாக பணம் வரும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரலாம்.  அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்ட இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரி;க்கும். அரசாங்கத்தின் அனுமதிகள் சுலபமாக கிடைக்கும். நட்பு  வட்டம் விரிவடையும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்றுவீர்கள். உங்கள் மனதிற்கு சரியென பட்டதைச் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். இதமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சுகபோகங்களை தியாகம் செய்துவிட்டு சந்ததிக்காக வாழும் மிதுன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிரிகள் அடங்கிப்போவார்கள். திருமண விஷயங்களில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை கைமாற்றுவீர்கள்.  உங்களுடைய பேச்சிற்க மதிப்பு கூடும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிய பொறுப்புக்களுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். வசதி வாய்ப்புக்கள் பெருகும் வாரம் இது. 
 
அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
சாதுவாக இருந்து காரியம் சாதிக்கும் கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பணதட்டுப்பாடு ஏற்படும். இதனால்  வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும்.பணியாளர்களுக்கு பணி சுமைகள் அதிகரிக்கும். பயணங்களினால் சிறிது உடல் சோர்வுகள் காணப்படும். உடலில் காயங்கள் உண்டாகும் அபாயங்கள் காணப்படுகின்றன. குடும்ப செலவுகள் அதிகமாக காணப்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. இவ்வாறாக இந்த வாரம் முழுவதும் கெடுதலான பலன்களே காணப்படுகின்றன. எனவே கவனம் அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
போராட்டங்களை சலைக்காமல் எதிர்கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆலோசனை சொல்வீர்கள். சந்தை நிலைவரம் அறிந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். குழப்பங்களில் இருந்து விடுபடும் வாரமிது. உங்களின் செல்வாக்கு கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். இருந்த போதிலும் அவ்வப்போது பழைய கடன்களை நினைத்து அச்சம் கொள்வீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கற்பனை வளம் அதிகம் உள்ள கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொலைதூரப் பயணங்களில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். உணவு சார்ந்த தொழில்களினால் லாபம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு பெருகும். சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை வரும். எதிர்பார்த்த பணமும் வரும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் வருமானத்தை அதிகரிக்கலாம். குடும்பத்தில் அன்பு மேலோங்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
அதிகம் அறிந்திருந்தும் அலட்டிக்கொள்ளாத துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வது அவசியம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை . வியாபாரத்தில் சில குழப்பங்கள் வந்து வந்து நீங்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். தடைபட்ட உயர்கல்வியைத் அரசாங்க அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். 
 
அதிர்ஷ்ட திகதி : 13
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
கடல் தாண்டி போனாலும் கலாசாரத்தை மீறாத விருச்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பெற்றோர்கள் உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிப்பாதையில் பயணிக்கும் வாரமிது. தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு மனை வாங்க விற்க மேற்கொள்ளும் முயற்ச்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 14
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அடுத்தவர்களின் தவறுகளை இங்கிதமாக எடுத்துரைப்பதில் வல்லவர்களான தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரத்தை முன்னேற்ற கடினமாக முயற்ச்சி செய்வீர்கள். ஓரளவு பண வரவு காணப்படும். எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும்.  இடையிடயே உஷ்ணம் சம்மந்;தமான பிரச்சனைகளில் அவதிப்படுவீர்கள். ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும்.   வேண்டாத பேச்சுகளால் மனசங்கடங்கள் உருவாகும். நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகமாகும். கூட்டுத்தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகலாம். எனவே கவனம் அவசியம். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
மனதிற்கு பிடித்தவர்களுக்கு வாரி வழங்கும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். வேற்று நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும் வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். இதனால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். திடீர் திருப்பங்களும் யோகங்களும் நிறைந்த வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பாதை மாறி சென்று பணம் சம்பாதிக்க தயங்கும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நண்பர்களின் வருகை உற்சாகத்தைக் கொடுக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிவாய்ப்புக்கள் கிடைக்கும்.  வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். 
 
அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
சொந்த பந்தங்களிடம் பாசத்தை கொட்டும் மீன ராசி அன்பர்களே..!   
 
இந்தவாரம் முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் உயரும். வேலைக்கு முயற்ச்சி செய்த இடத்தில் இருந்து நல்ல பதில் வரும். பிள்ளைகளின் படிப்பு திருமணம் சம்மந்தப்பட்ட முயற்ச்சிகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். 
 
அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .