2022 ஜனவரி 22, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (17.11.2013 – 23.11.2013)

A.P.Mathan   / 2013 நவம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (17.11.2013 – 23.11.2013)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பா்களே..!
 
இந்தவாரம் ஏற்றம் தரும் வகையில் வருமானம் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் உண்டாகும். பணியில் முன்னேற்றமான நிலை காணப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம்  காணப்படும். உறவினர்களிடத்தில் அன்யோன்யம் காணப்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்து பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆனால் வார இறுதியில் தகுந்த ஓய்வும் தேவை. சக பணியாளர்களால் பணிசுமைக்கு ஆளாக நேரிடும். எனவே வார இறுதியில் கவனம் தேவை.
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் நோய் தொந்தரவு காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இல்லத்தில் திருட்டு பயங்கள் காணப்படும். தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். இந்தவாரம் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வது அவசியம். உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை. ஆனால் வார இறுதியில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காணப்படும். வார இறுதியில் மிகவும் மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது, பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் அரசினரால் தனலாபங்கள் உண்டாகும். நல்ல இனிமையான உறக்கங்கள் கிடைக்கும். இல்லத்தில் செலவுகள் அதிகரிக்கும். மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். பொறுப்புக்கள் அதிக அளவில் காணப்படும். குடும்பத்தில் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறும். ஆனால், வார இறுதியில் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வீர்கள். ஆரோக்கியக் குறைவால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே கவனம் அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் நண்பர்களின் மூலம் பல உதவிகள் கிடைக்கும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்புக்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். உடல்நிலை மேம்பாட்டிற்கான பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இந்தவாரம் மிகவும் மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
 
தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பெண்களுக்கு பெருமைகள் தேடி வரும் வாய்ப்புக்கள் உண்டாகும். நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
சந்திராஷ்டமம்:
நவம்பர் 17ஆம் திகதி மாலை 5.50 மணியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதி காலை 04.45 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தீடீர் பணப் பிரச்சினைகள் உண்டாகும். பணி சுமைக்கு ஆளாக நேரிடும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். துன்பமான நிகழ்வுகள் உண்டாகும். காரியங்கள் தடைப்படுதல் மற்றும் சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படும். ஆனால் வார இறுதியில் குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். எதிர்பார்த்த அரசாங்க செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்: 
நவம்பர் 19ஆம் திகதி காலை 4.45 மணியிலிருந்து நவம்பர் 22ஆம் திகதி மாலை 05.09 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரம் விருத்தியடையும். பணத் தட்டுப்பாடுகள் இருக்காது. சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். வார இறுதியில் உஷ்ணம் சம்மந்தமான பிரச்சினைகளில் அவதிப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஒருசில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். கடின பேச்சுக்களால் மனம் சஞ்சலமடையும். பொறுமையுடன் பேசுவது அவசியம். 
 
அதிர்ஷ்ட திகதி : 21
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
சந்திராஷ்டமம்: 
நவம்பர் 22ஆம் திகதி மாலை 5.09 மணியிலிருந்து நவம்பர் 24ஆம் திகதி காலை 05.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும். புதிய வழிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். மக்கள்  மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். வார இறுதியில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். எந்த விடயத்திலும் நாட்டம் இருக்காது. வீணான மன உழைச்சல்கள் காணப்படும். வீண் விவாதங்களே உண்டாகும். எனவே பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமாகும். இந்தவாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன. 
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வேண்டாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபார சிக்கல்கள் உண்டாகும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும். முயற்சி செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். எதிர்பார்த்த செய்திகள் தோல்வியில் முடியும். வார இறுதியில் பெண்களுடைய தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும். பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். வியாபாரத்தில் இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வழிகள் பிறக்கும். உழைப்பும் பொறுப்பும் அதிகரித்த நிலையிலேயே இருந்து வரும். பணிபுரியும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். வரவும் செலவும் சமமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் திருப்தி காண்பீர்கள். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் தேடி வரும். இந்தவாரம் உங்களுக்கு இனிமையாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 18 
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ்ச, சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X