2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (29.06.2014 - 05.07.2014)

A.P.Mathan   / 2014 ஜூன் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (29.06.2014 - 05.07.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
மாற்றுத் திட்டம் பின்பற்றி அதிக நன்மை பெறும் மேட ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் நீங்கள் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பணியில் இருப்பவர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிறர் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். திருடர்களினால்  துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகும். தொழிலில் சுமாரான போக்கே காணப்படும். உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். எனவே இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சுமாராகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 4  
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்.
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அடுத்தவர் தரும் உதவியை அளவுடன் ஏற்கும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சுபகாரியப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஏற்றுமதி இறக்குமதி களில் ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.  குறித்த நேரத்திற்கு பணிகளை முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வருகை உண்டாகும். புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். ஆனாலும் வார இறுதியில் குடும்பத்தில் சில சலசலப்புகள் காணப்படும்.   வேண்டாத பேச்சுக்கள் மற்றும் செலவுகளால் மனம் வேதனையடைதல் மற்றும்  உடல் நிலையில் பாதிப்புக்கள் போன்றவை உண்டாகும்;. எனவே இந்த வாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.
 
அதிர்ஷ்ட திகதி : 3 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தன்னிடம் பழகுபவர்களுக்கு உரிய மரியாதை தரும் மிதுனம் ராசி அன்பர்களே..!
            
இந்த வாரம் தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குல தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும். தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும். உழைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. திடீர் யோகம் கிட்டும் நாள். இருந்த போதிலும் சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம்.  பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். குடும்ப விஷயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது.  பணியிடங்களில் அமைதியாக செல்வது நலம். வேலைபார்ப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் உங்களுக்கு இவ்வாறாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 5   
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மஞ்சள்  
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும் கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் செலவுகளில் சிக்கனமாக இருப்பீர்கள். வருங்காலத் திட்டம் நிறைவேறும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மக்கள்  மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.  எதிர்பாரத திடீர் செலவுகள் காணப்படும்.  ஆனாலும் புது வாகன யோகம் உண்டாகும்.நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி  சுமூக உறவு காணப்படும்.  பணம் தேவைக்கேற்ப வரும். இ;டம் மாற்றம் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி 
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காணப்படும். முக்கிய பணிக்காக தங்கள் சேமிப்புகள் குறையும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தடைகளை கண்டு தளராதீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். உதவியை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை. சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 2 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
குடும்ப உறுப்பினர்களிடம் கூடுதல் பாசம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம்  உடன் பிறந்தவர்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபார மாற்றங்கள் உண்டாகும். வீண் பேச்சுக்கு ஆளாகாமல் தங்கள் கடமையை செய்வது நன்மையைக் கொடுக்கும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். ஆனாலும் கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.  இளைய சகோதரர்களின் வரவினால் ஆதாயம் கிடைக்கும்.  பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது.ஏற்றுமதி  இறக்குமதி செய்வோர் பெருத்த லாபம் பெற்று மனம் மகிழச்சியடையலாம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.  பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி :3
அதிர்ஷ்ட நிறம்:  கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
 
நடை, உடை செயலில் வசீகரம் நிறைந்த  துலா ராசி அன்பர்களே..!
     
இந்தவாரம்  கடன்  பணம் வசூலாகும். வியாபார வாய்ப்புக்கள் தேடி வரும். பணயில் அமைதி நிலவும். தொழில் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவுவர். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள்  கிடைக்கும்.  பகையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.சில  புதிய தொழில்கள்  தொடங்க ஏதுவான நாள்.  வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சுப செய்திகள் வந்து சேரும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தகுதி மீறிய வாக்குறுதியை தவிர்த்திடும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.  சுமூகத்தீர்வு காண்பது பிரச்சனையைக் குறைக்கும். இடமாற்ற முயற்சிகள் வெற்றியைத்தரும். உரிய பரிசோதனைகள் மூலம் ஆரோக்கியம் பேணலாம். விரும்பிய பொருட்கள் உங்களுக்கு பரிசாக கிடைக்கும்.  நீண்ட நாளைய  நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.  இருந்த போதிலும்  பெண்களுக்கு வயிற்றில் பிரச்சனைகள் காணப்படும். குடும்பத்தில் சில சங்கடங்கள் உண்டாகும். துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.  போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். எனN இந்த வார இறுதியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். 
 
அதிர்ஷ்ட திகதி : 1 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் உள்ள தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். பிள்ளைகளின் மேல் அன்பு கூடும். 
ஆன்மீகத்தில் சிந்தனை மேலோங்கும். சக ஊழியர்களிடம் சுமாரான உறவுகள் காணப்படும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். யாரிடமும் எதையும்; நம்பி  ஏமாற வேண்டாம். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். மனதில் இருந்த குழப்பம் மற்றும் மனக் கசப்புக்கள் நீங்கும். இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 3 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கருணை மனதுடன் உதவுகிற மகர ராசி அன்பர்களே..!  
 
இந்த வாரம் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கணவன் மனைவி  உறவு  சுமூகமாக செல்லும்.   வேலைக்கு செல்பவர்கள்  முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.  இரத்த சம்மந்தமான உறவுகள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவீர்கள்.  வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம்.  விருந்தினர்களின் வருகை உண்டாகும். இந்த வாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன. 
 
அதிர்ஷ்ட திகதி : 3 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான் 
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு அதிக நன்மை பெறும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். புதிய தொழில் தொடங்க ஏதுவான நாள். இ;டமாற்ற முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். கடின உழைப்பால் விற்பனை அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.  அரசாங்க செய்திகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும்.  எடுத்த காரியத்தில் வெற்றி  உண்டாகும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. ஆனாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை . கை கால் மூட்டுகளில் வலி வந்து நீங்கும்.  யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. 
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம்:  கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணி நிறைவேற்றும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும்  உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும்.  நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனத்தை வாங்குவீர்கள். இடம் மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.  தொழிலில் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பிரயாணங்களினால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 4 
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .