2022 ஜனவரி 22, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (29.12.2013 – 04.01.2014)

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (29.12.2013 – 04.01.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேட ராசி அன்பா்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் சரியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைக்காமல் அவதிப்படுவீர்கள். மற்றவர்கள் உதவியை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். வீண் வாக்குவாதம், பேச்சுக்களைத் தவிர்க்கவும். வார இறுதியில் நட்பு மற்றும் உதவிகள் கிடைத்தல். பொருளாதார நிலை சீராக அமையும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரித்தல். சாதனைகள் வெற்றி அடையும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை அவரவர் தகுதிக்கு ஏற்ப கிடைக்கும். முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த வாரம் தொடக்கம் சில சங்கடங்களைக் கொடுத்தாலும் இறுதியில் மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 04
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
சந்திராஷ்டமம்: 
டிசெம்பர் 29ஆம் திகதி மாலை 12.59 மணியிலிருந்து டிசெம்பர் 31ஆம் திகதி மாலை 01.55 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சாதுர்யமாக செயல்பட்டு சாதனை படைக்கும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் சிலவிதமான சிக்கல்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழுகுவது நல்லது. காரியங்கள் தடைப்படுதல் மற்றும் பகை உண்டாகும். விளையாட்டுக்களில் ஈடுபடும்பொழுது கவனம் தேவை. வீண் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு சொந்தமான பொருட்கள் சேதமடையும். குடும்ப ரகசியம் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது நல்லது. மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவும். இல்லத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வேண்டும். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை. இதனால் வார இறுதியில் வருமானம் ஓரளவு இருக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
சந்திராஷ்டமம்: 
டிசெம்பர் 31ஆம் திகதி மாலை 01.55 மணியிலிருந்து ஜனவரி 02ஆம் திகதி மாலை 01.02 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வாழ்வில் திட்டமிட்டு செயலாற்றும் மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மனைவி மற்றும் குழந்தைகள் மூலம் நன்மை உண்டாகுதல். மனதில் உற்சாகம், தைரியம் அதிகரித்தல். மனநிறைவான சூழ்நிலை உண்டாதல். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவதால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். விறுவிறுப்பாக செயல்பட்டு நல்ல வளர்ச்சி காண்பர். நிலம் சம்மந்தமான பிரச்சினைகளில் சமரசபோக்கு காணப்படும். காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்கு சாதகமாக அமையும். பணம் கைக்கு வந்து மனதை மகழ்ச்சியில் ஆழ்த்தும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுக்கு பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். வெளிநாட்டில் இருந்து ஏதாவது ஒரு செய்தி வந்து சேரும். இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்: 
ஜனவரி 2ஆம் திகதி மாலை 01.02 மணியிலிருந்து ஜனவரி 04ஆம் திகதி மாலை 12.36 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
பிறருக்கு உதவும் மனம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் உடல் நலம் சீராக இருப்பதற்கு பயிற்சிகளைப் பின்பற்றுவது அவசியம். தேவையில்லாத வாய் வார்த்தைகளால் வீண் பிரச்சினைகள் உருவாகும். முயற்சிகள் தோல்வியடைதல். முன்னேற்றம் தடைப்படுதல். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகுதல். ஆனாலும் வார இறுதியில் பணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சுயதொழிலில் லாபம் அதிகரிக்கப்பெறுவீர்கள். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் புதிய வாகனத்தை வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கும். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மேலதிகாரிகளுடனும் எதிரிகளுடனும் மிக கவனமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேருதல். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படுதல். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சொந்த தேவையை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் தருவீர்கள். நண்பர்களுடன் வெளியில் சுற்றுலா செல்வீர்கள். மனதளவில் அலைச்சல்கள் உண்டாகும். சுவையான உணவு கிடைக்கும். புதிய முயற்சிகள் லாபகரமாக அமையும். பணம் தேவைக்கேற்ப வரும். இந்தவாரம் சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 30
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வயதில் குறைந்தவருக்கும் மரியாதை தருகிற கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவுவர். வெண்மையான ஆடை அணிதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், மனதில் உற்சாகம் பிறக்கும். பணம் தேவைக்கேற்ப வரும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். வெளியூர் பயணங்கள் அதிகம் உண்டாகும்.  ஆனால், வார இறுதியில் பிற இனத்தவர்களால் தீமை உண்டாகும். அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்பட்டு நீங்கும். முன் யோசனையுடன் செயல்படுவது அவசியம். பணிச்சுமையால் அடிக்கடி உடல் சோர்வு காணப்படும். எதிர்மறை பலன்கள் காணப்படுகின்றன. இந்தவாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.
 
அதிர்ஷ்ட திகதி : 02
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
 
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் இல்லத்தில் உள்ள பெண்கள் பெரியவர்களுடன் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். எனவே மனசங்கடங்கள் தோன்றும். இருந்தாலும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வார இறுதியில் இல்லத்தில் இளைய சகோதரர்களின் வரவினால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்தில் எதிர்பார்த்த அளவில் பண வரவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்கள் கூடும். நண்பர்களுடன் கூட்டு சேரும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் ஓரளவு ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 01
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வேண்டாத செலவுகள் மற்றும் வீண் அலைச்சல்கள் காணப்படும். எதிரிகளின் மறைமுக தொல்லை இருந்து கொண்டே இருக்கும். நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது. ஆனால் வார இறுதியில் நீங்கள் விரும்பிய பொருட்கள் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பிரயாணங்களின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணியிடங்களில் முன்னுரிமை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க  திட்டம் தீட்டுவீர்கள். இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் கணினி துறையை சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். செய்கின்ற தொழிலில் வருவாய் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். மன பயம் நீங்கி மனோ பலம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உழைப்பின் மூலம் மட்டுமே உயர்வை அடையலாம். பொறுமை காப்பதால் மட்டுமே நிம்மதி உண்டாகும். உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அரசாங்கத்தில் இருந்து காரிய அனுகூலங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சி நிலவும் நல்ல தூக்கம் கிடைக்கும். முயற்சி செய்யும் காரியங்களில் வெற்றியடையலாம். இந்தவாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பிறருக்கு உதவும் மனம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புகள் கிடைக்கும். இல்லத்தில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். தொழிலாளர்கள் பெருத்த லாபம் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். ஆனாலும் மேலதிகாரிகளுடன் எதிரிகளுடனும் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் உண்டாகும். மனக்கஷ்டம் உண்டாகும். இந்த வாரம் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே காணப்படுகின்றன. 
 
அதிர்ஷ்ட திகதி : 02
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரிகளுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும். இல்லத்தில் அனைவரிடமும் உற்சாகம் அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். நிர்வாகப்பொறுப்புகள் கூடும். தந்தை வழி உறவில் பகை நீங்கி இணக்கம் உண்டாகும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். தொழிலில்  முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 31
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
வெளிப்படையாக பேசத் தயங்கும் மீன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவுகள் தென்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். கணவன் - மனைவி உறவு சுமூகமாக செல்லும். எதிர்கால நலன்களில் அக்கறை கொள்வீர்கள். சுய தொழிலில் தேவையான லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சுவையான சாப்பாடு கிடைக்கும். பெண்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். இன்பம் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் வார இறுதியில் சில சங்கடமான சூழ்நிலைகள் உருவாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம். 
 
அதிர்ஷ்ட திகதி : 31 
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு தவிர 
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X