2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

’ஓவியத்திருந்து வெளியேறும் நிறம்’

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பி.எம்.எதம்.ஏ.காதர்

மருதமுனை ஜமீல் எழுதிய 'ஓவியத்திருந்து வெளியேறும் நிறம்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, மருதமுனை மருதூர்க்கனி நூலக கேட்போர் கூடத்தில், நாளை (16) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்து கொள்ளவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக ஓய்வுநிலை ஆசிரியர் எஸ்.எம்.அபுவக்கர், அதிபர் ஏ.குனுக்கத்துல்லா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

விஷேட அதிதிகளாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி கவிஞர் முகம்மது தம்பி நௌபல்.சட்டத்தரணி கவிஞர் ஏ.எல்.றிபாஸ், சட்டத்தரணி எம்.எம்.முகம்மது முபீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நூலின் முதற் பிரதிகளை ஆசிரியர் ஏ.எச்.அப்துல் சமட், கிராஅபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப், டொக்டர்களான ஏ.ஸம்ஸமீர், ரீ.எம்.நியாஸ் ஆகியோரும் பெறவுள்ளனர்.

நூல் அறிமுகவுரையை கவிஞர் டணீஸ்கரனும் நூல் பற்றிய கருத்துரைகளை பேராசிரியர் சே.யோகராசா, ஆய்வாளர் ஏ.பியெம், இத்ரீஸ், ஆய்வாளர் சிறாஜ் மஷ்ஹூர், கவிஞர் ஜிப்றி ஹாஸன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.

ஏற்புரையை நூலாசிரியர் கவிஞர் ஜமீல் வழங்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X