2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட பௌர்ணமி கலை விழா

Editorial   / 2018 ஜூன் 29 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

கிராமத்துக் கலைகளை நகரத்துக்குக் கொண்டுவருதல், இளைய தலைமுறையினருக்கு  பாரம்பரியக் கலைகளைக் கையளித்தல் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில், பௌர்ணமி கலை விழா, மட்டக்களப்பு நகர காந்திப் பூங்காவில், நேற்று முன்தினம் மாலை நடத்தப்பட்டது.

இந்தப் பௌர்ணமி கலை விழாவில், மண்முனை வடக்கு பிரதேச செயவலாளர் பிரிவிலுள்ள பறங்கியர் கலை மன்றத்தினரால் கப்றிஞ்சா நடன நிகழ்வும்  மட்டக்களப்பின் புகழ்பூத்த கலைஞர் ஏ.ஞானப்பிரகாசம், எம்.சடாட்சரம், அ.ச.பாய்வா ஆகியோரால் பிரபலமான மெல்லிசைப் பாடல்களும் இசைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வனின் தொகுப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன், மாநகர மேயர் ரி.சரவணபவன், ஆணையாளர் என்.மணிவண்ணன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர், மாநகர உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த மாதாந்த பௌர்ணமி கலைவிழாவானது, சில வருடங்கள் கைவிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இம் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X