Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்திவேல்
இலங்கை மண்ணில் உருவான, “சத்தியயுகம்” திரைப்பட வெளியீட்டு விழா, மட்டக்களப்பு, தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய கேட்போர் கூடத்தில், நேற்று (24), மாலை நடைபெற்றது.
த.விமலநாதனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.அமலநாதன், நிதியமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மூ.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், கிழக்குப் பல்கலைக்கழகக் கலை, கலாசார முன்னாள் பீடாதிபதி க.இராஜேந்திரம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மற்றும் கலைஞர்கள், அரச அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் இளைஞர்கள் அவ்வப்போது குறுந்திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகின்ற இந்நேரத்தில், தேத்தாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த, கலைஞரும், ஆசிரியருமான அ.ஈழவேந்தன், இத்திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி, நடித்துள்ளார்.
விவசாயம், விஞ்ஞானம், எதிர் காலத்தில் விவசாயத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள் உள்ளிட்ட சிந்தனையைத் தூண்டக் கூடிய வித்தில், இத்திரைப்படத்தை தாயாரித்துள்ளதாக அ.ஈழவேந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த முயற்சி, எதிர்கால இளைஞர், யுவதிகளுக்கு சிறந்ததோர், எடுத்துக்காட்டாக அமைவதோடு, கிராமியக் கலைத்துறையில் மிளிர்கின்ற இக்கிராமம், இப்பொழுது திரைப்படத்துறையிலும் மிளிர்கின்றது என இதில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.
55 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025