2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2017 ஜூலை 21 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், பிரெஞ்சு புரட்சி நூல் வெளியீடு,  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 4 மணிக்கு,  நல்லூர், சங்கிலியன் தோப்பில் அமைந்துள்ள யூரோவில் கேட்போர் கூடத்தில், நடைபெறவுள்ளது.

சிந்தனைக்கூட பணிப்பாளர் இரா.சிவசந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நூல் பற்றிய அறிமுகவுரையை, யாழ்.பல்கலைக்கழக அரச அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கமும் விமர்சன உரையை பட்ட மேற்படிப்புப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சத்தியசீலனும் ஆற்றவுள்ளனர்.

நூல் ஆய்வுரைகளை,  யாழ்.பல்கலைக்கழக விவசாயத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சோமசுந்தரி கிருஷ்ணகுமாரும் அரச அறிவியல்துறை விரிவுரையாளர் எஸ்.விக்னேஸ்வரனும் ஆற்றவுள்ளனர்.

இவற்றைத் தொடர்ந்து நூலாசிரியர்  வாசுதேவனின்  ஏற்புரை இடம்பெறவுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .