2023 ஜூன் 07, புதன்கிழமை

’விடைபெறல்’ சிறுகதைத் தொகுதி வெளியீடு

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

விடைபெறல்' எனும் பெயரிலான சிறுகதைத் தொகுதி வெளியீடு, இணுவில் அறிவாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

எழுகலை இலக்கியப் பேரவையும் இணுவில் கலை இலக்கியப் பேரவையயும் இணைந்து, இந்நிகழ்வை நடத்தவுள்ளது.

இணுவில் கலை இலக்கிய வட்டத்தலைவர் கலாநிதி கந்தையா சிறிகணேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை படைப்பாளர் தொல்புரம் சி.கதிர்காமநாதனும்  சிறப்புரையை சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனும் வெளியீட்டுரையை எழுகலை இலக்கியப் பேரவை தலைவர் கை.சரவணனும் கருத்துரையை படைப்பாளர் த.அஜந்தகுமாரும் ஏற்புரையை செல்வி சிதம்பரபாரதி ஆகியோரும் நிகழ்த்தவுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .