2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

உங்களை மறவோம்-கல்லறைத்தெய்வங்களே!

Editorial   / 2021 நவம்பர் 26 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அழகான பொழுதுகளாய்

உங்கள் நினைவுகள் சுமந்த நடக்கின்றோம்- நாங்கள்
 
ஈழக்கனவை இதயத்தில் சுமந்து
இளமை வாழ்வைத்துறந்த-எம்
உள்ளம் நிறைந்த கடவுள் நீங்கள்
 
கார்த்திகை தீபமாய்
பார்போற்றும் தெய்வமாய்
ஊர்போற்றும் உத்தமர்கள் நீங்கள் உங்களை நாங்கள் என்றும் மறவோம்...
 
தேசத்தலைமையின் வழித்தடம் தவறாத- தேசக்குழந்தைகள்
நீங்கள்
நேசம்மறவா மக்களின்  உள்ளம் நிறைந்த உன்னத  வீரக்குழந்தைகள் நீங்கள்
உங்களை நாம் மறவோம்...
 
ஈழம் மலரும் 
இதயம் நிறையும் -என்ற 
காலப்பொழுது கனவினை சுமந்த 
கார்த்தீகை தீபங்கள் நீங்கள்
உங்களை நாம் என்றும் மறவோம்..
 
காலப்பொழுதில் காத்திருந்தோம்
உங்கள் வாசல் வர- கல்லறைத்தீபங்களே!
கண்ணுறங்கள் -என்றோ ஒரு நாள் விடியும் 
உங்களை நாம் என்றும் மறவோம்...
 
வீரக்குழந்தைகளே! விடுதலைக்கனவு சுமந்த 
தேசப்புதல்வர்களே!
பாசப்புதல்வர்களே! -இந்த 
பார்முழுவதும் உங்கள்  நினைவுகள் சுமந்து 
நெஞ்சம் மறவாது 
நினைவுடன்-நாங்கள்
நின்மதியாய் உறங்குங்கள்
கார்த்திகை தீபங்கள்
கல்லறை தெய்வங்களே!
உங்களை மறவோம்-என்றும் 
உங்கள் நினைவுடன்
 
 
உருத்திரபுரம்- விமல்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .