Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
எமுத்தாளர் பா. சிவஜெயன் எமுதிய திருகோணமலை மாவட்ட புகழ் பூத்த திருத்தலங்கள் என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா 17 - 12 - 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை ஜீபிலி மண்டபத்தில் ஆசிரியையும், எமுத்தாளருமான திருமதி ஜெ. மதிவதனி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை அதிதியாகவும், பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கமும், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்கள் வேதாகமமாமணி சோ. இரவிச்சந்திரகுருக்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வரவேற்புரையை ஊடகவியலாளர் அ . அச்சுதன் வழங்க, வெளியீட்டு உரையையும் நூலின் அறிமுக உரையையும் திருகோணமலை முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இரா. ஸ்ரீ. ஞானேஸ்வரன் நிகழ்த்த, ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூலாசிரியர் பா. சிவஜெயன் நிகழ்த்தவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025