2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

உலக சாதனை தொடர் நிகழ்ச்சியில் இலங்கையர்களுக்கு வாய்ப்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 01 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக தந்தையர் தினம், இம்மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, கனடா தமிழாழி தொலைக்காட்சி 55 மணித்தியால உலக சாதனை தொடர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதுடன், அதில் பங்குபற்ற இலங்கையர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது.

இதன்படி, பாட்டு, பேச்சு, சொற்பொழிவு மற்றும் கவிதை ஆகிய போட்டிகள் அனைத்துலக நாடுகளுக்கிடையில் நடைபெறவுள்ளன.

இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை 55 மணித்தியாலங்கள் தொடர் நிகழ்ச்சியாக இது நடைபெறவுள்ளது. போட்டியில் பங்குபற்ற வயதெல்லை கிடையாது எனவும் ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்குபற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்களுக்கு canadathamilaali@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி மற்றும் 0773168583, 0771591251 என்ற அலைபேசி இலக்கங்களுடனும் தொடர்புகொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .