2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கூத்து வடிவங்கள் நூலாக வெளிவருவது பாராட்டுக்குரியது

Sudharshini   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்


பூநகரியின் கூத்துவடிவங்கள் நூலாக வெளிவருவது பாராட்டுக்குரியதென கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.


இந்நிகழ்வில், செல்வி.நித்தியமதியின் வலிகளின் பொறிகள் கவிதை தொகுப்பும் நிமலராஜின் அறியாமை எனும் குறும்படமும் யேசுதாசனின் பூநகரிப் பிரதேச கூத்துக்கலைகளின் காவலர்கள் எனும் ஆய்வுக்கட்டுரை நூலும் வெளியீடு செய்யப்பட்டன.


கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலக கலாசாரப்பேரவையினால் மூன்று படைப்புகள் வெளியீடு செய்யும் நிகழ்வு பூநகரிப் பிரதேச செயலகத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,


அவர் தொடர்ந்து கூறுகையில்,


பூநகரிப் பிரதேச செயலகம் மூன்று படைப்புகளை வெளியீடு செய்வதென்பது மகிழ்வுக்குரியது. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களுடைய வேலைகளுக்கு மத்தியில், கலை, பண்பாடு மற்றும்; ஆவணங்களை சேகரித்து நூல்லொன்றை வெளியீடு செய்வதென்பது பாராட்டுக்குரியது.


மேலும், தனியாக வேலைகளுடன் மட்டும் நின்றுவிடாமல் சமூக அக்கறையுடன் கலை இலக்கியப் படைப்புகளை வெளிக்கொண்டு வர பூநகரி கலாசார பேரவை எடுத்த முயற்சிகள் சிறந்தவையாகும்.


பூநகரியின் கலை பண்பாடுகளை பாதுகாக்க எதிர்காலத்தில் நூலாகவும் குறும்படமாகவும் படைப்புகளை வெளியிடுவதுக்கு எல்லோரும் அர்ப்பணிப்புடன் பாடுபடவேண்டுமென்பதுடன் பூநகரியின் வரலாற்றுத் தொன்மையான இடங்கள் மற்றும் கலை இலக்கியப் படைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .