2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது இங்கிலாந்து - தென்னாபிரிக்கா

Editorial   / 2017 மே 24 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது.

இன்றைய முதலாவது போட்டி, லீட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இடம்பெறவுள்ள இந்தத் தொடர், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அணிகளைச் சரிபார்க்கும் தொடராக அமையவுள்ளது. எனவே, வெற்றிபெறுவதையும் தாண்டி, வீரர்கள் சிறந்த ஃபோர்மில், சம்பியன்ஸ் கிண்ணத்துக்குச் செல்வதை, இந்தத் தொடர் முன்னிலைப்படுத்தும்.

இந்தத் தொடருக்கு முன்பாக, 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடிய தென்னாபிரிக்க அணி, முதலாவது போட்டியில் அதிரடியான வெற்றியைப் பெற்றுக் கொண்டதோடு, 2ஆவது போட்டியில், ஓரளவு சிறிய வெற்றியையே பெற்றுக் கொண்டது.

மறுபக்கமாக இங்கிலாந்து அணியிலுள்ள பல வீரர்கள், இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் விளையாடிவந்த நிலையில், அங்கிருந்து நாட்டுக்குத் திரும்பி, பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். எனவே, இங்கிலாந்து ஆடுகளங்களில் போதியளவு அண்மைக்காலப் பயிற்சிகள் இல்லாமலேயே அவர்கள் களமிறங்குகின்றனர்.

ஆனால், ஐ.பி.எல் தொடரின் இறுதி 2 போட்டிகளிலும் பங்குபற்றாத போதிலும், முன்னைய போட்டிகளில் காட்டிய திறமை காரணமாக, தொடரின் மிகவும் பெறுமதிமிக்க வீரர் என்ற விருதை வென்ற பென் ஸ்டோக்ஸ், தனது ஐ.பி.எல் திறமைகளின் காரணமாக எழுந்துள்ள பாரிய எதிர்பார்ப்பு அலையை, எவ்வாறு சமாளிப்பார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .