2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இரட்டைக்கொலை சந்தேகநபர் தான் சுத்தவாளி என தெரிவிப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

கொள்ளையிடும் நோக்குடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, உறக்கத்தில் இருந்த கணவன் மற்றும் மனைவியை அலவாங்கினால் அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர், தான் சுத்தவாளி என நீதிமன்றத்தில் தெரிவித்ததால், ஏப்ரல் மாதம் 02, 03 மற்றும் 04ஆம் திகதிகளில், இந்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.

அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு  அவர் கட்டளையிட்டார்.

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கோண்டாவிலில் வீரசிங்கம் சுரேஸ்குமார் மற்றும் அவரது மனைவி சுரேஸ்குமார் சுகதீபா என்ற இருவரையும் அலவாங்கினால் தாக்கி, இரட்டைகொலை புரிந்த குற்றச்சாட்டில், பூநாரி ஒழுங்கை, கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த நபர் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மேற்படி சந்தேக நபருக்கு எதிராக, யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், குறித்த வழக்கு சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (28)  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேகநபருக்கு எதிரான குற்றப்பத்திரம் மன்றில் வாசித்துகாட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X