2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

உள்நாட்டு அரசிறைக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2017 ஜூலை 11 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு அரசிறைச் சட்டமூலத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.   
இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனுவை, தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன தெரிவித்தார்.   

2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியன்று அல்லது அதற்கு பின்னர் ஆரம்பிக்கப்படுகின்ற ஏதேனும், வரி மதிப்பீட்டுக்காக, வருமான வரியை விதிப்பதற்காக ஏற்பாட்டுக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்காகவே, இந்த உள்நாட்டு அரசிறை சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த வழக்கை, இன்று (11) தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X