Thipaan / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி சந்திரவன்ச பத்திராஜவுக்கு எதிரான வழக்கின் எழுத்துமூல அடிப்படை எதிர்ப்பைச் சமர்ப்பிப்பதற்கான தினமான, ஒக்டோபர் 20ஆம் திகதியை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (03) குறித்தது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் டிக்கெட்டுகள் இரண்டுக்கான பிரசார நடவடிக்கைகளை, முறையான விலைமனுக் கோரலின்றி தனியார் நிறுவனங்கள் மூன்றுக்குக் கொடுத்து, 23 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் டிசெம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .