2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

ஒருவர் வெட்டிப் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை

Princiya Dixci   / 2017 மார்ச் 30 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2003ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதியன்று, சகோதரர்கள் இருவரில், ஒருவரை வெட்டிப் படுகொலை செய்ததுடன், மற்றொருவருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவரில், ஐவரைக் குற்றவாளிகளான இனங்கண்ட பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க, அந்த ஐவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  

பாணந்துறை, அலுபோமுல்ல கிராமோதய மாவத்தையில் வசித்த, சகோதரர்கள் இருவர் மீதே, அறுவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

சந்தேகநபர்களில் ஐவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமையால் அந்த ஐவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றையவர் சகல குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X