2025 ஜூலை 19, சனிக்கிழமை

கடலில் வெடி வைத்தவருக்கு அபராதம்

George   / 2016 ஜூலை 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் டைனமைட் வெடி வைத்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று புதன்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி இந்த மீனவரை கடற்படையினர் கைது செய்தனர்.

டைனமைற் வெடிவைத்து பிடிக்கப்பட்ட, 350 கிலோகிராம் மீன்கள் மீனவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதுடன் கடற்றொழில் நீரியல் வளத்துறையினர், மீனவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, நாரா நிறுவனத்தின் மூலம் மீனவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்களை ஆய்வுக்குட்படுத்துமாறு நீதவான் பணித்திருந்தார்.

ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றதையடுத்து, வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கையில் வெடிமருந்து பாவித்து மீன்பிடித்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X