Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தில் பயிலும், 22 வயதான மாணவியைக் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்று கூறப்படும், முச்சக்கரவண்டியின் சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, அநுராதபுரம் மேலதிக மாவட்ட நீதவான் ஹர்ஷன கெகுனுவெல உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, நேற்று (01) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும், அநுராதபுரம் பிரதான பொலிஸ் பரிசோதகர் சஜீவ மாநாமவுக்கு, நீதவான் கட்டளையிட்டார்.
தன்னுடைய நண்பிகள் குழாமுடன், இலங்கைக்கு வருகைதந்த மேற்படி சுவிற்சர்லாந்து யுவதி, அநுராதபுரத்தில் உள்ள புனித இடங்களை பார்வையிடுவதற்காக வருகைதந்துள்ளார்.
எனினும், அந்த குழுவிலிருந்து தனித்துவிட்ட அந்த யுவதி, தான் தங்கியிருந்த இடத்தைத் தேடிக்கொள்ளமுடியாமல், அநுராதபுரம் நகரத்தில், ஜூலை 26ஆம் திகதியன்று அதிகாலை வேளையில் நின்றுகொண்டிருந்துள்ளார்.
அங்குவந்த மேற்படி சந்தேகநபரான முச்சக்கரவண்டியின் சாரதி, யுவதியை கடத்திச் சென்று பலவந்தமாக சிறைப்படுத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். எனினும், அவரது பிடியிலிருந்து தப்பிவந்த யுவதி, பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே, முச்சக்கரவண்டியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததாக, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவின் அதிகாரி, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதனையடுத்தே சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
22 minute ago
27 minute ago