Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2017 ஜூன் 02 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எலன் மெதினியாராமய விகாரையின் விகாராதிபதியுமான உடுவே தம்மாலோக தேரரின் வழக்கின் விசாரணைக்கான தினமாக, ஜூலை 18ஆம் திகதியை கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்று (01) குறித்தது.
கிருலப்பனை, பொல்ஹேன்கொடவிலுள்ள எலன் மெதினியாராமய விகாரையில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி, தொல்லை படுத்துவதாக, அப்போதைய அமைச்சர் மிலிந்த மொறகொட மற்றும் அப்பிரதேசத்தில் வசிக்கும் 4 முறைப்பாட்டாளர்களால், தம்மாலோக தேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதிகாலை 5 மணிமுதல் 6 மணியான காலப்பகுதிலேயே ஒலிபெருக்கி ஒலிக்கவிடப்படுவதாகவும் இதனால் விகாரையை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் டுலானி அமரசிங்க முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கை கொண்டு நடத்த வேண்டாம் என, தேரரின் சட்டத்தரணியால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டதுடன், விசாரணைக்கான தினமும், நீதவானால் குறிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago