Princiya Dixci / 2017 மார்ச் 09 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இடம்பெற்ற 125 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட உதிரிப்பாக விநியோகஸ்தரான நந்தன பிரியந்தவை, எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜே. ட்ரொஸ்கி, இன்று (08) உத்தரவிட்டார்.
அத்துடன், நந்தன பிரியந்தவின் பிணை தொடர்பிலும் அன்றைய தினமே உத்தரவிடப்படும் என நீதவான் அறிவித்தார்.
இ.போ.சவின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், திங்கட்கிழமை (06) பிணையில் விடுவிக்கப்பட்டார். அந்த உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, செவ்வாய்க்கிழமை (07) விடுவிக்கப்பட்டார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago