2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நாமல் பெரேரா மீது தாக்குதல்: இருவருக்கு பிணை

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் புலனாய்வு உத்தியோகத்தர்கள் அறுவரில் இருவரை, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி உத்தரவிட்டார். 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊழியராக இருந்த நாமல் பெரேரா மீது, 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று, கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அறுவர் கைதுசெய்யப்பட்டு, நால்வர் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X