2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

யுவதி கடத்தல்: ஏழு பேருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வானொன்றில் வந்து, 23 வயதான பெண்ணொருவரைக் கடத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்ட இராணுவ வைத்தியப் பிரிவின் சிப்பாய் உள்ளிட்ட ஏழுபேரையும், எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பெண், கெக்கிராவ-ஹல்மில்லேவ பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடந்த 7ஆம் திகதியன்று வெள்ளைநிற வானொன்றில் கடத்தப்பட்டார்.

சம்பவத்தையத்து, ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், கெக்கிராவ நீதவான் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பெண், கெக்கிராவப் பகுதியில் உள்ள பிரபல்யமான உணவு விடுதியிலேயே பணியாற்றுகின்றார். அன்றையதினம் பணியை முடித்துக்கொண்டு பிற்பகல் 2:30 மணியளவில், தன்னுடைய தங்குமிடத்துக்கு சென்றுகொண்டிருந்த போதே, இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில், கெக்கிராவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, வானை பின்தொடர்ந்த பொலிஸார், அந்த வானை மடக்கிப்பிடித்தனர். அத்துடன், வானிலிருந்த ஏழுபேரையும் கைதுசெய்தனர். அவர்கள் 25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

அத்துடன், வானிலிருந்து பிளாஸ்டிக்கிலான விளையாட்டுத்துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட அந்தக் குழுவிலிருந்த இராணுவ வைத்திய சிப்பாயுடன், மேற்படி யுவதி காதல் வயப்பட்டிருந்தார் என்றும், அந்த காதல், ஒரு மாதத்துக்கு முன்னரே முறிந்துவிட்டதாகவும் அதன்பின்னரே, அந்த யுவதியை கடித்தியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X