Kogilavani / 2017 ஜூலை 11 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்குக்கான சாட்சி விசாரணைத் தினமாக, ஒக்டோபர் 25ஆம் திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (10) நிர்ணயித்தது.
பிரபல வர்த்தகரான மொஹமட் ஷியாமின் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் சானிய அபேசேகர உட்பட மூன்று அதிகாரிகளை தரக்குறைவாகப் பேசியதுடன், அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில், வாஸ் குணவர்தனவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே, சட்டமா அதிபரால், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் நேற்று (10) எடுத்துக்கொள்ளப்பட்டது, இதன் போது மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சாட்சிகளின் விசாரணைத் தினங்களை அறிவிப்பது தொடர்பில், மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியை, சாட்சியங்களின் விசாரணைக்கான தினமாக அறிவித்த நீதிபதி, அம்மாதம் 30ஆம் திகதிமுதல் தினசரி சாட்சியப்பதிவு இடம்பெறும் எனவும் அறிவித்தார். அத்துடன், 1ஆம் 2ஆம் 3ஆம் இலக்க சாட்சியாளர்களுக்கு அழைப்பாணையும் பிறப்பித்து நேற்றையதினம் உத்தரவிடப்பட்டது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago