Princiya Dixci / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பல தரப்புகளையும், பெப்ரவரி மாதம் 13ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (06) நோட்டீஸ் அனுப்பியது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, பிணை கோரித் தாக்கல் செய்திருந்த திருத்த மனுத் தொடர்பில் காரணங்களைத் தெரிவிப்பதற்காகவே, மேற்குறிப்பிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்சவின் திருத்த மனு, மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ. களுஆராச்சி முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதிபதி மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகை அடிப்படையில் அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை, தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91.635 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச, இன்று (07) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கு அமையவே விமல் வீரவன்ச, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த உத்தரவை மீள்திருத்துமாறு கோரியே, ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஊடாக, அவர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமாயின், உதவி பொலிஸ் அதிகாரியின் சான்றிதழ், நீதிமன்றத்தில் ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.
எனினும், விமல் வீரவன்ச தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளது, சான்றிதழ் அல்ல எனவும் அறிக்கையாகும் என்றும் திருத்த மனு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதனையடுத்தே, மேற்கண்ட உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025